திருச்சியில் வழிப்பறி, நகைகள் திருடிய 3 பேர் மீது குண்டாஸ்

திருச்சி, மார்ச் 23: தனியார் பேருந்தில் பயணம் செய்த மார்க்கெட்டிங் மேனேஜர் டிராவல் பேக்கில் வைத்திருந்த 23½ பவுன் தங்க நகைளை திருடிய மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கடந்த பிப்.19ம் தேதி பாலக்கரை மணல்வாரித்துறை பொது கழிப்பிடம் அருகே நடந்து சென்ற லோடுமேனிடம் கத்தியை காட்டி ₹.10,800 பணத்தை பறித்து சென்றதாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரனை செய்தனர்.

விசாரணையில் தென்னூர்ஆழ்வார்தோப்பை சேர்ந்த ஷேக்தாவூத் (38) தென்னூர் புது மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சூசைராஜ் (34), அரியமங்கலம் காமராஜ்நகரை சேர்ந்த யாசர்அராபத் (28) ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், விசாரணையில் கடந்த பிப்.17ம் தேதி தனியார் பேருந்தில் பயணம் செய்த மார்க்கெட்டிங் மேனேஜர் டிராவல் பேக்கில் வைத்திருந்த 23½ பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் மூவரும் கைது செய்யப்பட்டு, தங்க நகைகளை கைப்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து சூசைராஜ் மீது காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் மற்றும் கரூர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள வழக்குகள் உட்பட 9 வழக்குகளும், ஷேக்தாவுத் மீது காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், கோட்டை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உள்பட 22 வழக்குகளும், யாசர் அராபத் மீது தில்லைநகர் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகள் உள்பட 15 வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த அறிக்கையை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ஷேக் தாவுத் (38), சூசைராஜ் (34), யாசர் அராபத் (28) ஆகிய மூவரிடம் குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற வழிப்பறி மற்றும் கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post திருச்சியில் வழிப்பறி, நகைகள் திருடிய 3 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Related Stories: