₹3 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், மார்ச் 23: மல்லசமுத்திரத்தில் நடந்த ஏலத்தில் ₹3 லட்சத்திற்கு கொப்பரை விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியிலிருந்து 80 மூட்டை கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் கிலோ ₹74.10 முதல் ₹89.25 வரையிலும், இரண்டாம் தரம் ₹63.80 முதல் ₹72.80 வரையிலும் ஏலம் போனது. இதன் மூலம் ₹3 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

The post ₹3 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: