திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் துபாய் பறக்க முயன்றவர் கைது

 

திருச்சி, மார்ச் 22: திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் துபாய் பறக்க முயன்றவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் தாண்டவராயன் சோழகன்பேட்டையை சேர்ந்தவர் குட்டி ஆண்டிசாமி (39). இவர் மயிலாடுதுறை கொடுவையை அடுத்த திருமுல்லை வாசல் முத்துக்குமார் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.

இதன் மூலம் துபாய் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் வந்தார். அப்போது அவரது ஆவணங்களை பரிசோதித்த இமிக்ரேஷன் அதிகாரிகள், பாஸ்போர்ட் போலியானது என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து குட்டி ஆண்டிசாமியை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் குட்டி ஆண்டிசாமி மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

The post திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் துபாய் பறக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: