சாரநாதன் பொறியியல் கல்லூரியில் லக்ஷ்யா பல்சுவை நிகழ்ச்சி

 

திருச்சி, மார்ச் 21: திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் லக்ஷ்யா என்ற தேசிய அளவிலான இளங்கலை மாணவர்களுக்கான பல்சுவை போட்டிகள் கடந்த மார்ச் 16ம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவன செயலர் சந்தானம் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 25க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட குழுக்களாக 325 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஐந்து வித்தியாசமான போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டனர். பிஷப் ஹீபர் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. சிறப்பு அழைப்பாளராக பெங்களூர் மென்பொருள் நிறுவனமான ஐ.பி.எம்இலிருந்து மென்பொறியாளர் பாலாஜி ஷங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலாண்மை துறை தலைவர் முனைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். சாரநாதன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வளவன் கலந்து கொண்டார். செயலர் ரவீந்திரன் தனது வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார். மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். பேராசிரியர் மற்றும் லக்ஷ்யா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மஹாலக்ஷ்மி நன்றி கூறினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

The post சாரநாதன் பொறியியல் கல்லூரியில் லக்ஷ்யா பல்சுவை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: