கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் கோவையில் இன்று திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

 

கோவை, மார்ச் 21: கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தளபதி முருகேசன் (கோவை தெற்கு), தொண்டாமுத்தூர் ரவி (ேகாவை வடக்கு), திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை பாராளுமன்ற தொகுதி ‘இந்தியா கூட்டணி’ திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா மினி ஹால் வளாகத்தில் இன்று (வியாழன்) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் ‘இந்தியா கூட்டணி’ கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

எனவே, கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக இந்தியா கூட்டணியின் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள், மேயர், துணை மேயர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

The post கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் கோவையில் இன்று திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: