சோள உருண்டை

தேவையானவை

பாசிப் பருப்பு – 100 கிராம்
தேங்காய்ப் பால் – 30 மில்லி
பனை வெல்லம் – 10 கிராம்
சோள முத்து – 80 கிராம்
உப்பு மற்றும் மிளகு – சுவைக்கேற்ப
டெம்புரா மாவு – 40 கிராம்
சோளமாவு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 300 மில்லி (பொரிப்பதற்கு)
இது தவிர ஒரு முட்டையின் வெள்ளைக்கரு அடித்துக்கொள்ளவும்.

செய்முறை

பாசிப் பருப்பை நன்றாக வேகவைத்து, அதில் தேங்காய்ப் பாலுடன் பனை வெல்லத்தை கலக்கவும். பிறகு, வேகவைத்த சோள முத்துகளை அந்த பாசிப்பருப்பில் போட்டு, உப்பு மற்றும் மிளகைச் சேர்க்கவும். அதன்பின், மாவை ஒட்டும் பதத்துக்கு வரும்வரை கலக்கவும். கலவையை சிறு வட்டமாக உருட்டிக்கொள்ளவும். அதை முட்டையின் வெள்ளைக் கருவில் தோய்த்து, கொதிக்கும் எண்ணெயில் இட்டு பொன் நிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். இவ்வாறு பொரித்து எடுக்கும்போது சுவையான சோளஉருண்டை ரெடி!

 

The post சோள உருண்டை appeared first on Dinakaran.