ஒன்றிய அமைச்சர் ராஜினாமா; கிரண் ரிஜிஜுவுக்கு கூடுதல் பொறுப்பு.! ஜனாதிபதி அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் ராஜினாமா செய்ததால், அவர் கவனித்து வந்த துறையை ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு கவனிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பீகாரின் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஓர் இடம் கூட கொடுக்கவில்லை. அதனால் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரும், ஒன்றிய அமைச்சருமான பசுபதி குமார் பராஸ் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘எனது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் எனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து அறிவிப்பேன்’ என்றார். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து பசுபதி குமார் பராஸ் ராஜினாமா செய்ததால், அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். அதனால் தற்போது கேபினட் அமைச்சராக இருக்கும் கிரண் ரிஜிஜுவுக்கு, கூடுதலாக பொறுப்பாக உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் பொறுப்பையும் ஒதுக்கி உத்தரவிட்டார்.

The post ஒன்றிய அமைச்சர் ராஜினாமா; கிரண் ரிஜிஜுவுக்கு கூடுதல் பொறுப்பு.! ஜனாதிபதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: