போடி அருகே ஓடைப் பாலம் அமைக்கும் பணி நிறைவு: நெடுஞ்சாலை விரிவாக்கம் தொடர்கிறது

போடி: போடி-உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலையில் ஓடைப் பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. மேலும் சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. போடி-உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போதும் அதிக அளவில் போக்குவரத்து இருக்கும். இந்த சாலை துவக்கத்தில் மூன்று 3.75 மீட்டர் அகலம் கொண்ட குறுகிய சாலையாக இருந்தது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி 11 மீட்டர் அகலம் கொண்டதாக சாலை வி ரிவாக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் பின்னர் வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்ததால் சாலையை மேலும் 6 மீட்டர் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக சாலை விரி வாக்கம் பணி தொடர்ந்து நடை பெற்று முடிவுறும் தருவாயில் உள்ளது. சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கால்வாய் சீரமைக்கப்பட்டு அதன் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் நடுவில் 1400 மீட்டர் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது.

இச்சாலையில் கிருஷ்ணா நகர், கரட்டுப்பட்டி பிரிவு உள்பட மூன்று இடங்களிலும் மேற்குப் பகுதியில் இருந்து வருகின்ற காட்டாறு வெள்ளம் கால்வாய்களில் கடக்கிறது . சாலைகளில் மழை நீர் தேங்காதவாறு ஏற்கனவே இருந்த குறுகிய சிமெண்ட் குழாய் பாலங்கள் இடித்து அகற்றப்பட்டு இரண்டு ஆழமான உயரமான புதிய மெகா பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் வழியே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடமான ரெங்கநாதபுரம், கிருஷ்ணா நகர் இடையே மெகா கால்வாய் மீது நடைபெற்று வந்த பாலம் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளது. 21 நாட்களுக்குப் பின்னர் இந்தப் பாலமும் போக்குவரத்துக்கு தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் மாற்றுப் பாதைகள் அகற்றப்பட்டு பாலத்தின் வழியாக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.

The post போடி அருகே ஓடைப் பாலம் அமைக்கும் பணி நிறைவு: நெடுஞ்சாலை விரிவாக்கம் தொடர்கிறது appeared first on Dinakaran.

Related Stories: