தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,118 போலீசார் நியமனம்

 

திருச்சி, மார்ச் 17: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 118 போலீசார் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக எஸ்பி வருண்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஒரு எஸ்பி தலைமையில் 3 ஏஎஸ்பி-க்கள், 8 டிஎஸ்பி-க்கள், 36 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 263 எஸ்ஐ-கள், ஆயிரத்து 424 போலீசார் மற்றும் 383 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 2 ஆயிரத்து 118 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையானது, ஒரு டிஎஸ்பி, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 4 எஸ்ஐ-கள் மற்றும் 8 போலீசாருடன் இயங்கி வருகிறது. இதுமட்டுமின்றி விருப்பமுள்ள போலீசார் அல்லாத தேசிய மாணவர் படை, தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் மற்றும் போலீசார் ஆகியோர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,118 போலீசார் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: