திருப்பூரில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி ஆய்வு

 

திருப்பூர், மார்ச் 17: நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. திருப்பூர் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் பணியாற்றும் பறக்கும் படை அதிகாரிகள், நிலை கண்காணிப்பு குழுவினர், தேர்தலில் பணியாற்றுகிற அரசு அதிகாரிகள் மற்றும் வீடியோகிராபர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவு சார்பில் கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 2520 வாக்குச்சாவடிகள் உள்ளன.23 லட்சத்து 44 ஆயிரத்து 810 வாக்காளர்கள் உள்ளனர். இதில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.இதற்காக திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அங்கு தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கேயம் பாளையம் புதூர் நகராட்சி பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் துணை தாசில்தார் வசந்தா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

The post திருப்பூரில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: