நீ மோர் பந்தல் திறப்பு வீரராகவ பெருமாள் கோயில்: தேர் திரை தயார்படுத்தும் பணி தீவிரம்

திருப்பூர், மே 9: கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், ரயில் நிலையம் அருகே உள்ள அண்ணா பெரியார் சிலை முன்பு நீர்மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை எம்எல்ஏ செல்வராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், பகுதி செயலாளர்கள் மியாமி அய்யப்பன், மு.க.உசேன், மாவட்ட துணைச்செயலாளர் டிஜிட்டல் சேகர், வட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், நேதாஜி கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சலீம், மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி மற்றும் நிர்வாகி சிவபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர், மே 9: திருப்பூர் வீரராகவ பெருமாள், விஸ்வேஸ்வரசுவாமி கோயிலில் வைகாசி விசாக தேர் திருவிழாவை முன்னிட்டு தேர்கள் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.திருப்பூரில் பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோயில் , விஸ்வேஸ்வரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக தேர்திருவிழா 2 நாட்கள் விமர்சையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு திருவிழா வரும் 23, 24ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தேரோட்டம் நெருங்கிற சூழலில் கோயில் உள்ள தேரை பழுதுபார்த்து சுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தொழிலாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

The post நீ மோர் பந்தல் திறப்பு வீரராகவ பெருமாள் கோயில்: தேர் திரை தயார்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: