திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 17: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி தலைமை ஆசிரியர் ராஜு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், ஒன்றிய தலைவர் ராதிகா பிரபு, வட்டார கல்வி அலுவலர் தமிழரசி, தேன்மொழி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுரேந்திரன், ஆசிரியர் பயிற்றுநர் உலகநாதன்,இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லியோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ,மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஏவுகணை, போக்குவரத்து பயணங்கள், சாலை வழி, வான்வழி,

கடல் வழி, மாட்டு வண்டி, அணை கட்டுகள். செயற்கை கோள்கள். தொலைக்காட்சி, குளிர் சாதன பெட்டி, பள்ளி அமைப்பு, ராட்டினம், தானிய உணவுகள் போன்ற பல்வேறு படைப்புகள் செய்யப்பட்டு காட்சி படுத்தப்பட்டிருந்தது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாத்திமா கனி மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பள்ளி கல்வி கற்றல், கற்பித்தல் மற்றும் பள்ளி வளாகத்தை பசுமை வளாகமாக மாற்றி சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதிலும் சிறந்த பள்ளியாக உள்ளது என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் என பலரும் பாராட்டியுள்ளனர்.

The post திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: