தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது: அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்


திருச்சி: ‘தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது’ என்று அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். திருச்சியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதிய தேசிய கல்வி கொள்கையை திட்டவட்டமாக எதிர்க்கிறோம். தேசிய கல்வி கொள்கை திட்டத்தின் கீழ் வரும் பிஎம். பள்ளிகளை திறக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் தனி கமிட்டி அமைக்கப்படும். மாநில உரிமையை பறிக்கும் வகையில் தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு இதுபோன்று அழுத்தத்தை தருகிறது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் என்ன மாதிரி ஆலோசனை சொல்கிறாரோ, நமது மாநிலத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்வோம். அதனால் தான் மாநில கல்விக் கொள்கையை உருவாக்குகிறோம். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் கொண்டு வருவது தான் எங்களுடைய எண்ணம். அதை நோக்கி தான் நாங்கள் செயல்படுகிறோம். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றும் ஏற்காது என்பதை நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது: அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: