சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் உயர் மின் கோபுர விளக்கு

 

பேராவூரணி, மார்ச்16: சேதுபாவாசத்திரத்தில் தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்ட விசைப்படகு சங்க தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார் . மாவட்ட செயலாளர் வடுகநாதன் முன்னிலை வகித்தார் .சிறப்பு அழைப்பாளராக மீனவர் நல வாரிய துணைத் தலைவர் தாஜுதீன் கலந்து கொண்டார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மீனவர் நலம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரை அண்மையில் நேரில் சந்தித்து கொடுத்த கோரிக்கைகளில் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் உயர் மின் கோபுர விளக்கு அமைத்து தர கோரி இருந்ததை உடனடியாக நிறைவேற்றி தந்ததற்கு அரசுக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது, மீனவர்கள் கடலில் தொழில் செய்யும்போது எதிர்பாராமல் எல்லை தாண்டி செல்லும் சூழ்நிலை வருவதால் கடலில் தூரப்பகுதிக்கு செல்லாமல் கரைப் பகுதியில் தொழில் செய்யும் மீனவர்களை கடல் ஒழுங்குமுறை சட்டத்தில் கரைப்பகுதியில் மீன்பிடிப்பதாக கூறி அதிகாரிகள் படகுகளை தொழில் முடக்கம் செய்வது, அபராதம் விதிப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை கண்டித்து அனைத்து படகுகளையும் ஒருங்கிணைத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தீர்வு காண்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள் செல்வக்கிளி, இப்ராஹிம், ஹபீப் முஹம்மத்,முத்து மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் உயர் மின் கோபுர விளக்கு appeared first on Dinakaran.

Related Stories: