கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டி சுப்பிரமணியர் கோயிலில் பங்குனிஉத்திர விழா கொடியேற்றம்

 

கந்தர்வகோட்டை,மார்ச் 16: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சி வேம்பன்பட்டி கிராமத்தில் எழுந்தருளித்து அருள் பாவித்து வரும் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான சுப்பிரமணியர் கோயிலில் பங்குனிஉத்திர கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. வேம்பன்பட்டி உச்சவர் கந்தர்வகோட்டை சிவன் ஆலயத்தில் இருந்து எடுத்து கொண்டு கோவிலூர் தெரு வழியாக அக்கட்சிபட்டி, மட்டங்கால், சிவந்தான்பட்டி, மல்லிகை நத்தம் வழியாக 12 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு செல்லுவது வழக்கம். அதேபோல் நடப்பு ஆண்டும் தரை தப்பட்டை முழங்க, இளைஞர்களில் பெரும் சலங்கை ஆட்டம், பெண்களில் கும்பி ஆட்டம், குழவு ஒலியுடன் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. வழி நெடுகிலும், சுமார் 2000 பக்தர்கள் தேங்காய் பழ தட்டுடன் சாமியை வழிபட்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறங்காவலர் குழு தலைவர் செல்வநாயகம், மற்றும் அனைத்து மண்டகப்படிக்காரர்களும், பொதுமக்களும் செய்திருந்தனர்.

 

The post கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டி சுப்பிரமணியர் கோயிலில் பங்குனிஉத்திர விழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: