மின்சார வாகன கொள்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: இந்தியாவை மின்சார வாகனங்களை செய்யும் இடமாக ஊக்குவிப்பதற்கான திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய மின்சார வாகன கொள்கையின் மூலம் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வாகனங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும். இந்த திட்டத்திற்கு தேவையான குறைந்தபட்ச முதலீடு: ரூ 4150 கோடி, அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. உற்பத்திக்கான காலக்கெடு: இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கும், மின்சார வாகனங்களின் வணிக உற்பத்தியைத் தொடங்குவதற்கும், அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்குள் 50% உள்நாட்டு மதிப்பு கூட்டலை எட்டுவதற்குமான காலக்கெடு. 15% சுங்க வரி 5 வருட காலத்திற்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

 

The post மின்சார வாகன கொள்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: