கோட்டூர் ஒன்றியத்தில் ரூ.6.70 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: திருவாரூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

 

மன்னார்குடி, மார்ச் 15: துணை சுகாதார நிலைய கட்டுமானப்பணி, சாலைப்பணிகள், ஊராட்சி ஒன் றிய அலுவலக கட்டுமான பணி உள்ளிட்ட கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.6.70 கோடியில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட 67.குலமாணிக்கம் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தலா ரூ.7. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள், குலமாணிக்கம் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ரூ.11.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நியாய விலைக் கடையினையும், பள்ளிவர்த்தி ஊராட்சியில் ரூ.71.50 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிவர்த்தி முதல் பூந்தமங்கலம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலையினை யும், ஆதிச்சப்புரம் ஊராட்சியில் ரூ.60.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தினையும், கோட்டூரில் ரூ.5. 22. கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக த்தினையும் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, வட்டாட்சியர்கள் மன்னார்குடி மகேஷ் குமார், கூத்தாநல்லூர் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றியழகன், மாலதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post கோட்டூர் ஒன்றியத்தில் ரூ.6.70 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: திருவாரூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: