சந்தேகத்திற்கிடமாக வானத்தில் வட்டமிடும் டிரோன்களை பிடிக்க பயிற்சி அளிக்கப்பட்ட கழுகுகள் தயார்

* நாட்டில் முதல்முறையாக தெலங்கானா போலீசார் நடவடிக்கை

திருமலை: சந்தேகத்திற்கிடமான வகையில் வானத்தில் வட்டமிடும் டிரோன்களை தடுக்க நாட்டிலேயே முதல்முறையாக கழுகுகளுக்கு பயிற்சி அளித்து தெலங்கானா போலீசார் நடவடிக்ைக மேற்கொண்டுள்ளனர். தெலங்கானா மாநில போலீசார் ஆளில்லா விமானங்களை இடைமறித்து தாக்க ‘ஈகிள் ஸ்குவாட் அமைக்கிறது. ‘ஈகிள்ஸ் ஸ்குவாட் மூலம் விவிஐபி வருகைகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின்போது பாதுகாப்பை அதிகரிக்க கழுகுகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக தெலங்கானா மாநில போலீசார் சிறப்புக் குழு மூன்று ஆண்டுகளாக இரண்டு சிறப்பு கழுகுகளுக்கு இதற்காக பயிற்சி அளித்து வருகிறது. வானத்தில் பறக்கும் எதிரியாக (டிரோன்) ஆளில்லா விமானங்களைக் கண்டறிந்து அவற்றை அழிக்க சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளது. அந்த இரண்டு கழுகுகளும் இப்போது டிரோன்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

The post சந்தேகத்திற்கிடமாக வானத்தில் வட்டமிடும் டிரோன்களை பிடிக்க பயிற்சி அளிக்கப்பட்ட கழுகுகள் தயார் appeared first on Dinakaran.

Related Stories: