கும்பகோணம் பள்ளிவாசல்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

 

கும்பகோணம், மார்ச் 14: கும்பகோணம் பள்ளிவாசல்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. ரமலான் மாதம் பிறந்து விட்டாலே எங்கு பார்த்தாலும் நோன்புக்கஞ்சியின் வாசம் கமகமக்கும். அதிகாலையிலிருந்து மாலை வரை நோன்பை கடைப்பிடிக்கும் நோன்பாளிகளுக்கு உடலுக்கு சக்தி அளிக்கும் உணவாக நோன்புக்கஞ்சி விளங்குவதால் நோன்பாளிகள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களும் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதன்படி கும்பகோணம் மேலக்காவேரி முகைதீன் ஆண்டவர் ஜாமியா பள்ளிவாசலில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, முஸ்லிம் மக்கள் இறைவன் தனக்கு அளித்த வாய்ப்பாக கருதி போட்டி போட்டு ஆர்வமாக வந்து தங்களது சொந்த செலவில் நோன்பு கஞ்சியை முஸ்லிம் ஜமாஅத் மூலமாக வழங்கி வருகின்றனர். நோன்பு கஞ்சிக்காக ஏராளமானோர் விண்ணப்பித்தால் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் குலுக்கல் முறையில் நன்கொடையாளர்களை தேர்வு செய்கின்றனர். இதனை முஸ்லிம் மக்கள் மட்டுமில்லாமல் அனைத்து சமூக மக்களும் விரும்பி பருகுவதால் மதநல்லிணக்கத்தின் மறு பெயராகவும், ரமலான் மாதத்தின் அடையாளமாகவும் நோன்புக்கஞ்சி திகழ்கிறது என்றால் மிகையாகாது.

The post கும்பகோணம் பள்ளிவாசல்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: