சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தெரு நாடகம் முதலமைச்சருக்கு, செல்வராஜ் எம்எல்ஏ நன்றி

 

பல்லடம், மார்ச் 14: ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மற்றும் ‘துறை லா’ தொண்டு நிறுவனம் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவினாசி, திருப்பூர், காங்கயம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தெரு நாடகங்கள் நடத்தினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் மற்றும் அன்றாட செயல்பாடுகள் அன்றாட வாழ்க்கையில் பாதுகாக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்துதல் திடக் கழிவு மேலாண்மையை பின்பற்றுதல் நீர் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை தவிர்த்தல் பல்லுயிர் பாதுகாப்பு செயல்கள் வீட்டு பொருட்கள் உபயோகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மின் சாதனங்கள் மற்றும் கணினி மொபைல் போன்ற எலக்ட்ரானிக் கழிவுகள் கையாளுதல் மண்வளம் மற்றும் இயற்கை வளம் பாதுகாத்தல் போன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கி கூறினர்.

The post சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தெரு நாடகம் முதலமைச்சருக்கு, செல்வராஜ் எம்எல்ஏ நன்றி appeared first on Dinakaran.

Related Stories: