கீழக்கரையில் கல்லூரி ஆண்டு விழா

 

கீழக்கரை, மார்ச் 14: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 44வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூசுப், செயலாளர் ஹாஜி யாணி ஷர்மிளா, செயல் இயக்குனர் ஜானப் ஹமீது இப்ராஹிம், ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக்தாவூது தலைமை தாங்கினார். அறிக்கையினை மருதாச்சல மூர்த்தி சமர்ப்பித்தார்.விழாவிற்கு பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர், ராமநாதபுரம்  ரமணா கட்டிட கட்டுமான தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ரோட்டரி மாவட்டம் 3212ன் 202627ம் ஆண்டிற்கான மாவட்ட ஆளுநருமான காந்தி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். மூன்றாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் செல்வன் விஷ்ணு மாநில அளவில் தரம் பெற்று 700க்கு 696 மதிப்பெண்கள் மற்றும் நான்கு பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்தமைக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கிப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மின்னியல் துறையின் தலைவர் எஸ்.பி.நாகராஜன் வரவேற்றார். நிறைவாக, மின்னணுவியல் துறை தலைவர் பி.பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

 

The post கீழக்கரையில் கல்லூரி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: