நாடாளுமன்ற தேர்தலில் தேசிய, மாநில அரசியல் கட்சிகள் யாதவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும்: தமிழ்நாடு யாதவ மகாசபை வேண்டுகோள்

சென்னை: நாடாளுமன்ற பொது தேர்தலில் தேசிய, மாநில அரசியல் கட்சிகள் யாதவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச் செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச் செயலாளர் மனோகரன் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 16 பொது தேர்தலில் 10 சதவீத வாக்கு வங்கி கொண்ட யாதவ சமுதாயத்திற்கு தேசிய மற்றும் மாநில கட்சிகள் உரிய பிரதிநித்துவம் வழங்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. தமிழ்நாடு யாதவ மகாசபையால் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு யாதவ மகாசபை அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2023 செப்டம்பர் 2ம் தேதி திருச்சி சிறுகனூரில் 4 லட்சம் பேர் கலந்து கொண்ட யாதவர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய, மாநில அரசியல் கட்சிகள் யாதவர்களுக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கவேண்டும். மறுக்கும் பட்சத்தில் யாதவர் வாக்கு வங்கி பெரும்பான்மையாக உள்ள 15 தொகுதிகளில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக வேட்பாளர்களை நிறுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தவாரம் சென்னையில் நடைபெற உள்ள நிர்வாக குழு கூட்டத்தில் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். மேலும் தேர்தல் முடிந்த பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி எடுத்தால் யாதவர்கள் 2வது பெரிய சமூகமாக இருக்கும்.

The post நாடாளுமன்ற தேர்தலில் தேசிய, மாநில அரசியல் கட்சிகள் யாதவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும்: தமிழ்நாடு யாதவ மகாசபை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: