மகளிர் பிரீமியர் தொடர்; லீக் போட்டி இன்றுடன் நிறைவு: டெல்லி- குஜராத் மோதல்

புதுடெல்லி: 5 அணிகள் பங்கேற்றுள்ள 2வது மகளிர் பிரிமீயர் லீக் போட்டிகள் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 19வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மோதின. இதில் முதலில் பேட் செய்த மும்பை 19 ஓவரில் 113 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய பெங்களூரு 15 ஓவரில் 3 விக்கெட் இழந்து 115 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 6 விக்கெட் எடுத்ததுடன் நாட்அவுட்டாக 40 ரன் அடித்த எல்லிஸ் பெர்ரி ஆட்டநாயகி விருதுபெற்றார்.

8 போட்டியில் 4,வெற்றி,4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 3வது அணியாக பெங்களூரு எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன. தற்போது பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி (10 புள்ளி) வெற்றி பெற்றால் எந்த சிக்கலுமின்றி நேரடியாக பைனலுக்குள் நுழையும். 10 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ள மும்பையை (0.024), விட டெல்லியின் ரன்ரேட்டும் (0.918) நன்றாக இருப்பதால் தோல்வி அடைந்தாலும் இறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வரும் 15ம் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருவுடன் மும்பை பலப்பரீட்சை நடத்தும். இதில் வெல்லும் அணி பைனலில் 17ம் தேதி டெல்லியை சந்திக்கும்.

The post மகளிர் பிரீமியர் தொடர்; லீக் போட்டி இன்றுடன் நிறைவு: டெல்லி- குஜராத் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: