சில்லி பாயின்ட்

* வங்கதேச அணியுடன் நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான இலங்கை அணி: குசால் மெண்டிஸ் (கேப்டன்), சரித் அசலங்கா (துணை கேப்டன்), பதும் நிசங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, சமரவிக்ரமா, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்கா, சஹான் அராச்சிகே, மஹீஷ் தீக்‌ஷனா, துனித் வெல்லாலகே, அகிலா தனஞ்ஜெயா, சமிகா கருணரத்னே, தில்ஷன் மதுஷங்கா, பிரமோத் மதுஷன், லாகிரு குமாரா.

* ஐபிஎல் டி20 தொடரில் ரிஷப் பன்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பேட்ஸ்மேன்/விக்கெட் கீப்பராக விளையாட கிரிக்கெட் வாரியத்தின் உடல்தகுதி மற்றும் மருத்துவக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

* ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் ஜெர்மனியின் ஒய்வோன் லியுடன் மோதிய சிந்து முதல் செட்டை 21-10 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், லி காயம் காரணமாக விலகினார்.

The post சில்லி பாயின்ட் appeared first on Dinakaran.

Related Stories: