மாரநேரி கிராமத்தில் உழவர் வயல் தினவிழா

 

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 12: மாரநேரி கிராமத்தில் அட்மா திட்ட உழவர் வயல் தினவிழா கொண்டாடப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி அருகே மாரநேரி கிராமத்தில் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் உழவர் வயல் தின விழா கிசான் கோத்தீஸ் சார்பில் நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குநர் ராதாவின் வழிகாட்டுதலின்படி வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் துணை வேளாண்மை அலுவலர் ஜெயராமன், உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலமுருகன், வேளாண்மை உதவி அலுவலர் விக்னேஷ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவபிரசாத் ஆகியோர் இவ்விழாவை நடத்தினர். இவ்விழாவில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மாரனேரி விவசாயிகளுக்கு தென்னை மரத்தில் வரும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்துதல், உழவன் செயலி பயன்படுத்தும் முறை, இலை வண்ண அட்டையை பயன்படுத்தும் முறை, உயிர் உரம் கொண்டு விதைநேர்த்தி செய்யும் முறை ஆகியவற்றை செயல்முறை விளக்கங்களாக செய்துக்காடினார்கள். மேலும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பெண்கள் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விளக்கினார்.

The post மாரநேரி கிராமத்தில் உழவர் வயல் தினவிழா appeared first on Dinakaran.

Related Stories: