மாட்டுத்தாவணியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமையுங்கள்: ஐகோர்ட் கிளை உத்தரவு

 

மதுரை, மார்ச் 12: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கற்பக நகரைச் சேர்ந்த சி.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘புதுக்குளம் கண்மாய் பகுதியில் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுத்து, வண்டியூர் கண்மாய்க்கு தொழிற்பேட்டை வழியாக செல்லும் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

மேலும், வண்டியூர் கண்மாயை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மாநகராட்சி நீர்நிலைகளில் கழிவுகள் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கலாம். நீர்நிலைப்பகுதிகளில் சிறிய பாலங்கள் அமைப்பது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

 

The post மாட்டுத்தாவணியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமையுங்கள்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: