கரூர் செங்குந்தபுரம் பிரிவு சாலையில் ஆபத்தான இரும்பு குழாயால் வாகன ஓட்டிகள் அவதி

 

கரூர், மார்ச் 11: கரூர் புகளூர் ரோடு செங்குந்தபுரம் பிரிவு சாலையில் ஆபத்தான நிலையில் சுமார் அரை அடி உயரத்திற்கு இரும்பு குழாய் உள்ளது.இந்த பகுதி வழியாக தினசரி சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதுண்டு. மேலும் காலை மற்றும் மாலை வேலைக்கு செல்பவர்கள் மீண்டும் வேலை முடித்து வருபவர்கள் ,பள்ளி மாணவ மாணவியர் சைக்கிளில் இவ்வழியாக செல்வது வழக்கம்.ஆனால் இந்த பகுதியில் வடிகால் வாய்க்கால் அருகில் 1/2 அடி உயரத்திற்கு இரும்பு கம்பி இருப்பதால் அந்த வழியாக செல்பவர்கள் இரும்பு கம்பி மேலே வாகனம் ஏறியதில் கீழே விழுந்து பலர் விபத்துக்குள்ளாகி காயம் அடைந்துள்ளனர்.

மேலும் தின்னப்பா தியேட்டர் இந்த பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் செயல்படுவதால்இந்தப் பகுதியில் ஆட்டோ இருப்பதால் செங்குந்தபுரம் பகுதியில் இருந்து புகளூர் ரோட்டில் இருந்து செங்குந்தபுரம் பகுதிக்கு செல்வதற்கும் கடுமையான சிரமமாக இருக்கும். பொதுமக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வளைவு சாலையில் திரும்ப நிலை உள்ளது.நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் அல்லது மாநகராட்சி அதிகாரிகளோ ஆபத்தாக இருக்கும் இரும்பு குழாயை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூர் செங்குந்தபுரம் பிரிவு சாலையில் ஆபத்தான இரும்பு குழாயால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: