துவரங்குறிச்சியில் உலக மகளிர் தின விழா

 

திருச்சி, மார்ச் 11: மனிதம் சமூக பணி மையம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இணைந்து உலக மகளிர் தின விழாவை நேற்று புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் மாதர்சம் மேளன மாநகர் மாவட்ட செயலாளர் அஞ்சுகம் தலைமையில் நடத்தியது. இதில் மனிதம் சமூக பணிமைய இயக்குனர் தினேஷ் குமார் வரவேற்புரையாற்றினார். மேலும் நிர்வாகிகள் பார்வதி, ஆயிஷா, ஈஸ்வரி, புஷ்பம் வைத்தியநாதன், லாவண்யா முத்துலட்சுமி, ரஷ்யா பேகம், மருதாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரஸ்வதி பாலா மந்திர் மாணவிகளின் பட்டிமன்றம், உரைவீச்சு, நடன நிகழ்ச்சிகளும்-படையப்பா பறை இசை குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது .பெண்களுக்கு எதிரான மனுநீதி என்கிற தலைப்பில் இந்திய மாதர் தேசிய சம்மேளன தேசிய செயலாளர் பத்மாவதி, பெண்கள் பற்றி பிஷப்ஹீபர் கல்லூரி தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் பாலின் ப்ரீத்தா ஜெபசெல்வி, பெண் அரசியல் பற்றி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கவிஞர் பிரியதர்ஷினி உரை நிகழ்த்தினர். சாதனை புரிந்த ஐந்து பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. மாதர் சம்மேளன மேற்கு பகுதி செயலாளர் சுமதி நன்றி கூறினார்.

The post துவரங்குறிச்சியில் உலக மகளிர் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: