மூலை‌ அனுமார் கோயிலில் சிறப்பு வழிபாடு

 

தஞ்சாவூர், மார்ச் 11: தஞ்சாவூர் மேலவீதி மூலை அனுமார் கோயிலில் நேற்று மாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு லட்ச ராம நாமம் ஜெபம், தொடர்ந்து தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மூலை அனுமாருக்கு துளசிகளாலான சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும், அனுமாருக்கு 1008 எலுமிச்சை பழ மாலை சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை கைங்கர்யம் குழுவினர் செய்திருந்தனர்.

The post மூலை‌ அனுமார் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: