பா.ஜ அணிக்கு சிராக் பஸ்வான் முழுக்கு?பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு

பாட்னா: பீகாரில் பாஜ அணியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி இடம் பெற்றுள்ளது.ராம்விலாஸ் பஸ்வானின் தம்பி பரஸ் குமார் பஸ்வான் தலைமையில் இயங்கும் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியும் பாஜ கூட்டணியில் உள்ளது. பரஸ் குமார் பஸ்வான் தற்போது ஒன்றிய அமைச்சராகவும் உள்ளார். இந்த நிலையில், மக்களவை தொகுதி பங்கீடு தொடர்பாக சிராக் பஸ்வான் பாஜ தலைமையுடன் பேசி வந்தார். ஒரு சில தொகுதிகளை லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிகள் தங்களுக்குதான் ஒதுக்க வேண்டும் என்று கேட்பதால் பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிராக் பஸ்வானின் ராஷ்டிரிய ஜனதா தளத்தை காங்கிரஸ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியில் சேர்க்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியானது.

சிராக் பஸ்வானுக்கு 6 எம்.பி தொகுதிகள் வரை ஒதுக்க தயார் என்று ஆர்.ஜெ.டி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் தூது விட்டதாக கூறப்பட்டது. சாகிப்கன்ஞ் சட்டப்பேரவை தொகுதியில் நேற்று நடந்த கட்சிப் பொதுக் கூட்டத்தில் பேசிய சிராக் பஸ்வான், நான் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறேன் என்று அனைவரும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு கூட்டணியும் என்னை விரும்பி அழைக்கின்றனர் என்றார். தொடர்ந்து பேசும்போது, அதிக தொகுதிகள் தரும் கூட்டணியில் சேரத் தயார் என்று சூசகமாக தெரிவித்த சிராக், பாஜ கூட்டணிக்கு முழுக்கு போட தயாராகி விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post பா.ஜ அணிக்கு சிராக் பஸ்வான் முழுக்கு?பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: