சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா இன்று தொடங்கியது!

திருச்சி: சக்தி தலங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் வழங்குகிறது. இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலத்தில்,வெளிநாட்டில் உள்ள பக்தர்கள் அம்மன் இங்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

மேலும் நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும், செல்வ செழிப்போடு குடும்பம் விளங்கவும், வேண்டிக்கொண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாகவும், கார், வேன் போன்ற வாகனங்களிலும், சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாத தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல்திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடிந், காலையில் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்செரிதல் விழா தொடங்கியது. பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த விழாசிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த 28 நாட்களும்அம்மனுக்கு படையல் கிடையாது. நைவேத்தியமாக நீர்மோர், பானகம், கரும்புச்சாறு, இளநீர் உள்ளிட்டவைகளையே படைத்து பக்தர்கள் வழிபட முடியும். 10.3.24 பூச்சொரிதல் துவங்கியதை முன்னிட்டு யானை முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தட்டுகளில் பூக்களை ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.

முக்கியஇடங்களில் கண் காணிப்பு கோபுரம்அமைத்து கண்காணிப்பதோடு பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

The post சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா இன்று தொடங்கியது! appeared first on Dinakaran.

Related Stories: