போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட ஜாபர் சாதிக் டெல்லியில் கைது

புதுடெல்லி: போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஜாபர் சாதிக் டெல்லியில் கைது செய்யப்பட்டார். போதையூட்டும் வேதிப்பொருட்களை தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக்கூறி வெளிநாடுகளுக்கு கடத்தி வந்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் மீது மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில், வழக்கு தொடரப்பட்டது.

இந்தநிலையில்,மத்திய போதைப்போருள் தடுப்பு பிரிவு நேற்று டெல்லியில் ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளது. இதுகுறித்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை பொது இயக்குனர் ஞானேஷ்வர் சிங் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கைது நடவடிக்கை விவகாரத்தில் டெல்லி போலீசார் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர்.

ஜாபர் சாதிக்கை பொறுத்தமட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கடத்தி உள்ளார். இதுதொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்குக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

The post போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட ஜாபர் சாதிக் டெல்லியில் கைது appeared first on Dinakaran.

Related Stories: