நிலக்கரி நிறுவன பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா? திரும்ப பெறாவிட்டால் ஒன்றிய அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 7 சதவிகித பங்குகளை விற்று ரூ.2,000 கோடி முதல் ரூ.2200 கோடி வரை மார்ச் 7ல் இருந்து 11ம் தேதிக்குள் நிதி திரட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூ.30,901 கோடியாக உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை ஒன்றிய பாஜ அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை ஒன்றிய பாஜ அரசு விற்கக் கூடாது. அப்படி விற்குமேயானால், அந்த பங்குகளை தமிழக அரசு வாங்குவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுத கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு தாரைவார்ப்பது தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post நிலக்கரி நிறுவன பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா? திரும்ப பெறாவிட்டால் ஒன்றிய அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: