10 ஆண்டுகளாக விலைகளை ஏத்திவிட்டு மகாத்மா காந்தி போல பேசும் மோடி: திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்

திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு தங்கத்தின் விலையை ரூ.50 ஆயிரம் வரை ஏற்றியிருக்கிறது. இப்படி அத்தனை விலைகளையும் உயர்த்தி விட்டு இன்றைக்கு நான் தான் மகாத்மா காந்தி என்பதை போல நமது பிரதமர் மோடி எல்லா இடங்களிலும் பேசி வருகிறார். 10 வருட கால மோடி ஆட்சியில் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது தான் சிறப்பு.

தொழிலதிபர்களிடம் நன்கொடை என்ற பெயரில் தேர்தல் பத்திரத்தின் மூலமாக பல ஆயிரம் கோடிகளை வாங்கியுள்ளதாக கணக்கு வந்துள்ளது. எஸ்பிஐ வங்கி மூலம் எந்தெந்த துறையில் யார், யார் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்ற கணக்கை கேட்டால் எங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் கொடுங்கள் என கூறி வருகிறார்கள்.

ஒரு பட்டனை தட்டினால் 2 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் யார் யார் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்துவிடும். ஆனால் ஒன்றிய அரசின் முகத்திரையை கிழிப்பதற்கு முடியாமல் எஸ்பிஐ வங்கி இப்படி கூறி வருகிறது. இது ஒன்றே போதும். ஒன்றிய அரசு எவ்வளவு மோசமாக மக்களின் வரிப்பணத்தை தொழில் அதிபர்கள் மூலமாக கொள்ளையடித்திருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள.
இவ்வாறு பேசினார்.

The post 10 ஆண்டுகளாக விலைகளை ஏத்திவிட்டு மகாத்மா காந்தி போல பேசும் மோடி: திண்டுக்கல் சீனிவாசன் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: