கோடை காலத்தை ஒட்டி, மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் : தெலங்கானா அரசு அறிவிப்பு!!

சென்னை : கோடை காலத்தை ஒட்டி, தெலங்கானாவில் வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோடைக் காலம் தொடங்கியதால், வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த சூழலில் கடுமையான வெயில் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இனி அரை நாள் மட்டுமே பள்ளி வகுப்புகள் நடத்தப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநிலப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து பிராந்திய இணை இயக்குநர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொடக்கப் பள்ளி, நடுநிலை, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதுபொருந்தும். அதன்படி, காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் இயங்கும். 12.30 மணிக்கு பள்ளியில் மதிய உணவு வழங்கப்படும். அதே நேரத்தில் பொதுத்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் தொடரும். அனைத்து பிராந்திய இணை இயக்குநர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து வகையான பள்ளிகளிலும் இதை அமல்படுத்தி, கண்காணிப்பை அமல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது”. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோடை காலத்தை ஒட்டி, மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் : தெலங்கானா அரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: