புன்னார்குளத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அஞ்சுகிராமம்,மார்ச் 8: புன்னார்குளத்தில் அதிமுக சார்பில் கோடையை சமாளிக்க வேண்டி பொதுமக்கள் வசதிக்காக தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அழகப்பபுரம் பேரூர் அதிமுக செயலாளர் அழகை மணிகண்டன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், யூனியன் துணை சேர்மன் சண்முகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் குலசேகரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி, பேரூர் அவைத் தலைவர் பத்மநாபன், செயலாளர்கள் மயிலை மனோகரன், மருங்கூர் சீனிவாசன், நிர்வாகிகள் முக்கடிதாசன், ஆறுமுகம், ராஜ், செல்வி, சுனிதா, கனகா, ராஜ்சிங், குமார், சதீஷ், ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது அழகப்பபுரம் பேரூர் தேமுதிக செயலாளர் சிவா, அதிமுக பேரூர் செயலாளர் மணிகண்டன் தலைமையில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

The post புன்னார்குளத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: