போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தளத்தை பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஆணை

வடகொரியா ராணுவ வீரர்கள் போருக்கு தயாராக வேண்டும் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளதை அடுத்து கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் நேற்று மேற்கு பிராந்தியத்தில் உள்ள ராணுவ தளத்தில் திருப்புகளுக்கான களப்பயிற்சியை ஆய்வு செய்தார். அப்போது போருக்கான தயாரி நிலைக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. வடகொரியாவின் எச்சரிக்கையும் மீறி அமெரிக்கா மற்றும் ஜப்பான் படையினருடன் தென் கொரியா தொடர்ந்து கூட்டுப் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வடகொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்த நிலையில் தற்போது போருக்கு தயார் நிலையில் இருக்குமாறு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

The post போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தளத்தை பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: