மதுரை காமராஜர் பல்கலை.யில் தொலை நிலைக்கல்வி நேரடி வகுப்புகள் நாளை மறுநாள் துவக்கம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்ககத்தில், 2021-22ம் கல்வியாண்டில் தொடங்கி செமஸ்டர் முறையில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கான நேரடி தொடர் வகுப்புகள் மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி மற்றும் நாகமலை புதுக்கோட்டை, பல்கலைநகரில் உள்ள மாணவர் சேர்க்கை மையம் ஆகியவற்றில் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்ககம் வழியாக 24 இளங்கலை மற்றும் 22 முதுகலை பட்ட படிப்புகள் நடத்தப்படுகிறது. இவற்றில் எதிர்வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்கக இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகின்றது. எனவே சேர விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விரும்பும் பாடத்தை தேர்வு செய்து சேர்க்கை பணிகளை மேற்கொள்ளலாம். இத்தகவலை தொலை நிலைக்கல்வி இயக்கக இயக்குநர் முத்துப்பாண்டி தெரிவித்துள்ளார்.

The post மதுரை காமராஜர் பல்கலை.யில் தொலை நிலைக்கல்வி நேரடி வகுப்புகள் நாளை மறுநாள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: