தெற்கு ஒன்றிய திமுக சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் வீடு வீடாக திண்ணை பிரசாரம்

ஜெயங்கொண்டம், மார்ச் 5: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” எனும் தலைப்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரசாரம் செய்யும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் முன்னாள் துணைவேந்தர் முனைவர் சபாபதி மோகன், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி சிறப்புறையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பொய்யாமொழி, ஷாஜஹான், சுமதி, கருணாநிதி மற்றும் மாவட்ட அணி அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், திமுக வினர் பலரும் கலந்து கொண்டனர்.

The post தெற்கு ஒன்றிய திமுக சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் வீடு வீடாக திண்ணை பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: