கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஊட்டி,மார்ச்5: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 29ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் தினேஷ்,பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் கூடிய வருவாய்த்துறை ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர்.வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பல்வேறு அரசு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் உட்பட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

The post கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: