சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று கருப்புக்கொடி காட்டப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று கருப்புக்கொடி காட்டப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய மாநில காங். தலைவர் செல்வப்பெருந்தகை; வெள்ள பாதிப்புகளுக்கு ஒரு பைசா கூட நிவாரணம் தராத நரேந்திரமோடி வாக்கு கேட்டு தமிழ்நாடு வருகிறார். வட மாநில மக்களை ஏமாற்றியது போல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என்று வருகிறார். ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்; மோடிக்கு தேர்தலில் மிகப்பெரிய தீர்ப்பை கொடுப்பார்கள்.

குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒரு நீதியை கடைப்பிடிக்கிறார் பிரதமர் மோடி. மீனவர்கள் பாதுகாப்பில் பிரதமர் மோடி பாரபட்சம் காட்டுகிறார். சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று கருப்புக்கொடி காட்டப்படும். தமிழ்நாட்டில் பிரதமர் மோடி எங்கு சென்றாலும் காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும். பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவித்ததில், பலர் போட்டியிட மாட்டேன் என பயந்து ஓடுகின்றனர். மோடி 9 ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினாரா என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டும்.

5 தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம்; திமுக-காங். உறவு நம்பிக்கையான உறவாக இருக்கிறது. எங்களை ஒருபோதும் திமுக தலைவர் ஸ்டாலின் குறைத்து மதிப்பிட மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார். காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பிலும் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அதன் தலைவர் ரஞ்சன் குமார் அறிவித்துள்ளார்.

The post சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று கருப்புக்கொடி காட்டப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: