நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 1800 மையங்களில் 2.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

நெல்லை, மார்ச் 4: நெல்லை மாவட்டத்தில் ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் கார்த்திகேயன், குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் கிராமப்புறம், நகர்புறம் பகுதிகளில் உள்ள பஸ் நிலையம், ரயில் நிலையங்கள், இடம் பெயர்ந்து வாழும் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகள், செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், சுங்கசாவடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என 925 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மூலம் 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 34 ஆயிரம் 366 குழந்ைதகள் பயன்பெறுகின்றனர். இம்முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

விடுபட்ட குழந்ைதகளுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் வீடு, வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் மருத்துவத்துறையை சேர்ந்த பணியாளர்கள், செவிலியர் கல்லூரி மாணவர்கள், சத்துணவு பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்பட மொத்தம் 3627 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். தென்காசி: தென்காசி மங்கம்மா சாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்து துவக்கி வைத்து கூறுகையில், ‘தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தியாவில் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செயல்படுத்துவதன் காரணமாக இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளாக போலியோ நோய் தாக்கம் இல்லை. இனிவரும் காலங்களிலும் போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து ஒரே தவணையாக நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

மாவட்டத்தில் இம்முகாமின் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 997 குழந்தைகள் பயனடைவர். கிராம மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள 20 பேருந்து நிலையங்களிலும், 6 ரயில் நிலையங்களிலும், 10 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் இடம்பெயர்ந்து வாழும் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் மற்றும் செங்கல் சூளைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், மேலும் 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் 656 அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றிலும் மொத்தம் 875 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த 712 பணியாளர்களும், செவிலியர் கல்லூரி மாணவர்கள் 39 பேர்களும், சத்துணவுப் பணியாளர்கள் ஆயிரத்து 615 பேரும், தன்னார்வலர்கள் 1134 பேர்களும் மொத்தம் 1500 பணியாளர்கள் பணியாற்றினர்’ என்றார்.

முகாமில் நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் கேஎன்எல் சுப்பையா, ஆணையர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் கல்பனா கங்காதரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கோவிந்தராஜன், வட்டார மருத்துவ அலுவலர்கள் ராஜ்குமார், மணிகண்டன், சுகாதார அலுவலர்கள் தர்மலிங்கம், கோமதி, பத்மா, நாகராஜன், கணேஷ் பேச்சிமுத்து பங்கேற்றனர்.

The post நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 1800 மையங்களில் 2.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து appeared first on Dinakaran.

Related Stories: