கரூர் தான்தோன்றிமலை அரசு கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூர், மார்ச் 3: கரூர் தான்தோன்றி மலை அரசு தன்னாட்சி கலைக் கல்லூரி வளாகத்தில் 22-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவைக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் தொடங்கி வைத்தார்.

2022-2023ம் கல்வியாண்டில் பட்டப் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா பட்டங்கள் வழங்கி பேசியதாவது,
வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும் துணை நிற்பது நீங்கள் பெறும் கல்வி மட்டுமே. திருவள்ளுவரின் குறட்பா கூறும் நெறியில் நீங்கள் வாழவேண்டும். பெற்றோரையும் பிறந்த நாட்டையும் என்றும் மறந்துவிடக்கூடாது. வாழ்க்கையில் மேல்நிலை அடைய நல்ல சிந்தனைகளை தூண்டும் புத்தகங்களை படிக்க வேண்டும். வாழ்க்கையில் உயரமான நிலையை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்றார். பட்டமளிப்பு விழாவில் துறைகளையும் சார்ந்த 1,360 நபர்கள் பட்டங்களை வழங்கினார்.

விழாவில் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் கற்பகம், அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர்.

The post கரூர் தான்தோன்றிமலை அரசு கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: