நாகர்கோவில் ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா: சுவாமி சைதன்யானந்தஜி தொடக்கி வைத்தார்

 

நாகர்கோவில், மார்ச் 4: நாகர்கோவில் புதுக்கிராமம் ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி 2வது ஆண்டுவிழா ரோஜாவனம் கல்வி குழும தலைவர் அருள்கண்ணன் தலைமையில் துணை தலைவர் அருள்ஜோதி முன்னிலையில் நடந்தது. பள்ளி சீனியர் முதல்வர் பினுமோன் வரவேற்றார். வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். பள்ளி முதல்வர் காமராஜினி அறிக்கை வாசித்தார்.

பள்ளி நிறுவனர் ரத்தினசாமி, பள்ளி கவுரவ தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம், கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் அருணாசலம், நாகர்கோவில் டிவிடி பள்ளி முன்னாள் முதல்வர் குமாரசுவாமி, சிங்கப்பூர் கல்வி நிறுவன செயல் அதிகாரி ரவிமணி, தேரூர் ஊராட்சி தலைவர் அமுதாராணி ஆகியோர் பேசினர்.

பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் ராஜாராமன் கலந்துகொண்டு பேசுகையில், ‘ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச பாட திட்டம், படைப்பு மற்றும் புதுமை வழி கல்வி, ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி கற்க ஏற்றார் போல் ‘வானமே எல்லை’ என்ற கோட்பாட்டின்படி சிறுவயதில் இருந்தே அதற்கான மன நிலையை உருவாக்கி சிறப்பு பயிற்சிகள் நீட், ஐஐடி, ஜெஇஇ, யுபிசிஎஸ்இ, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கி வருவதும் சிறப்பு’ என்றார்.

நிகழ்ச்சியில் ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி கல்வியியல் ஆலோசகர் சாந்தி, நிதி ஆலோசகர் சேது, பள்ளி துணை முதல்வர் அஜிதா குமாரி, ஒருங்கிணைப்பாளர் யூஜினி, நன்னடத்தை ஆசிரியர் ராஜன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post நாகர்கோவில் ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா: சுவாமி சைதன்யானந்தஜி தொடக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: