நாடாளுமன்ற தேர்தல்: புதுவையில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவத்தினர் நேற்றிரவு அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதியில் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பு நடத்தினர். நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் மாநில, மாவட்ட தேர்தல் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் மாநில எல்லைகளில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் நேற்றிரவு புதுவை வந்தனர். புதுச்சேரி அரியாங்குப்பம் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட அரியாங்குப்பம். தவளக்குப்பம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு எஸ்.பி பக்தவச்சலம் தலைமையில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

நெல்லை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் 71 பேர் அடங்கிய ஒரு கம்பெனி துணை ராணுவப் படையினர் நேற்று நெல்லை வந்தனர். இவர்கள் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி வந்து அங்கிருந்து நேற்று மாலை நெல்லை வந்தனர். நெல்லை மகாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி கூறுகையில், நெல்லை மாநகரத்திற்கு மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவப் படையினர் மூலம் நெல்லை மாநகர பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்படும். மேலும் மாநகர போலீஸ் செக்போஸ்ட்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.

The post நாடாளுமன்ற தேர்தல்: புதுவையில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: