தேசிய அறிவியல் தினவிழா

காளையார்கோவில், மார்ச் 3: சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக காளையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் தேசிய அறிவியல் தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியை கமலம்பாய் வரவேற்புரையாற்றினார்.

முன்னதாக மாணவ,மாணவிகள் அறிவியல் அறிஞர்களின் புகைப்படங்கள் அறிவியல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் சர் சிவி.ராமனின் முகமூடிகள் அணிந்த மாணவர்கள் என பள்ளி வளாகத்தில் பேரணியாக அறிவியல் கோஷங்கள் எழுப்பியவாறு வருகை புரிந்தனர். மாணவிகள் சண்முகப்பிரியா காவியா ஐஸ்வர்யா பிரியதர்ஷினி ஆகியோர் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறினர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி தேசிய அறிவியல் தின உறுதிமொழி வாசிக்க ஆசிரியர்கள் மாணவ,மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள். எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம் அறிவியல் மக்களுக்கே அறிவியல் நாட்டிற்கே அறிவியல் சுயசார்பிற்கே என்ற விழிப்புணர்வு வாசகங்கள் முழங்கப்பட்டன.

வானவில் மன்ற காளையார்கோவில் ஒன்றிய கருத்தாளர் ஜெயப்பிரியா எளிய அறிவியல் பரிசோதனைகளான கோணங்களின் வகைகள் எலும்பு மண்டலம் ரகசியக் குறியீடு அடுக்கிய வானவில் போன்ற ஆய்வுகளை செய்து காண்பித்து மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். தமிழகம் முழுவதும் தேசிய அறிவியல் தின விழா ஜூம் இணைய வழி மூலமாக நம் பள்ளி மாணவர்களும் இணைந்து அறிவியலுக்கான விளக்கங்களை அளித்து சிறப்பித்தார்கள். கணிதப் பட்டதாரி ஆசிரியை மீனாட்சி சர் சிவி.ராமனின் அறிவியல் பங்கேற்பு குறித்து பேசினார். ஆசிரியை அமல தீபா நன்றி கூறினார்.

The post தேசிய அறிவியல் தினவிழா appeared first on Dinakaran.

Related Stories: