இலங்கைத் தமிழர்களுக்கு 72 குடியிருப்புகள் திருமானூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

அரியலூர், மார்ச் 3: அரியலூர் மாவட்டம் திருமானூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 450 காளைகள் பங்கேற்றன. 24 பேர் காயமடைந்தனர். திருமானூரில் மாசிமகத்தையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. தெற்குவீதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

போட்டியில் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 450 காளைகள் பங்கேற்றன. காளைகளை பிடிக்க 7 பிரிவுகளாக 194 வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். பல காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் பாய்ந்தோடின. இதில் வீரர்கள், பார்வையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள் என 24 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் பலத்த காயமடைந்த கோவிலூர் தமிழரசன்(31), சுள்ளங்குடி தர்மராஜ்(61), வடுவூர் தேவா(17), அரண்மனைக்குறிச்சி ரஞ்சித்(19) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழு சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் இருந்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்றும் வீரர்களை பரிசோதனை செய்யவும், காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவக்குழு முகாம் மற்றும் கால்நடைகளுக்கு சோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவும் மருத்துவ குழு முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

The post இலங்கைத் தமிழர்களுக்கு 72 குடியிருப்புகள் திருமானூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: