தூத்துக்குடியில் உருக்காலையை 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம். மொத்தம் 65 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டதோடு, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தற்போது அளித்துள்ளது தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.இச்சந்திப்பின்போது. நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
The post தமிழ்நாடு அரசு மக்கள் பக்கம் நின்று வலுவான வாதத்தை முன்வைத்ததால் நீதி வென்றது : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நன்றி!! appeared first on Dinakaran.