கம்பம் நகரில் ரூ.3.5 கோடியில் சாலை பணிகள்: சேர்மன் தொடங்கி வைத்தார்

 

கம்பம், மார்ச் 2: கம்பம் நகரில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சாலைகள் அமைக்கும் பணியை நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் நேற்று பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன.

சுமார் 85 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். மக்களின் அடிப்படை வசதிகளை கம்பம் நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. நேற்று கம்பம் நகராட்சிக்குட்பட்ட கோம்பை மெயின் வடக்கு, ஆர்ஆர் நகர், குரங்கு மாயன் தெரு, அண்ணாபுரம், மாலையம்மாள் புரம், தாத்தப்பன்குளம், கம்பமெட்டு காலனி, நந்தகோபாலன் தெரு, கம்பராய பெருமாள் கோவில் தெரு மற்றும் பஸ் ஸ்டாண்ட் கீழ்புறம் ஆகிய பகுதிகளில் சேதம் அடைந்துள்ள சுமார் 2.850 மீட்டர் நீளமுள்ள தார் சாலைகளுக்கு பதிலாக புதிய தார் சாலைகள் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.

மேலும் ஏகலூத்து ரோடு, கிருஷ்ணபுரம், வரதராஜபுரம், எல்எப் ரோடு, காந்திநகர், மற்றும் ரேஞ்சர் ஆபீஸ் ரோடு ஆகிய பகுதிகளில் சேதமடைந்துள்ள 4.532 மீட்டர் நீளமுள்ள தார் சாலைகளுக்கு பதிலாக தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. இந்த இரு சாலை பணிகளும் நேற்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், உதவி பொறியாளர் சந்தோஷ், வக்கீல் துரை நெப்போலியன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் சுல்தான் சல்மான் பார்சி, இளம்பரிதி, பார்த்திபன், சர்புதீன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி பிஸ்மி சாதிக், அரசு ஒப்பந்ததாரர்கள் அப்துல் சமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post கம்பம் நகரில் ரூ.3.5 கோடியில் சாலை பணிகள்: சேர்மன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: