ஆர்.எஸ்.மங்கலம் தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

 

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 2: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வரும் மையங்களை பார்வையிட்டதுடன், கண்பார்வையற்ற மாணவி தேர்வு எழுதி வருவதை பார்வையிட்டு உதவியாளர் உரிய உதவிகளை வழங்கி நல்ல முறையில் தேர்வு எழுதிட உறுதுணையாக இருந்திட வேண்டுமென தெரிவித்தார்.

மேலும் கலெக்டர் தெரிவிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 6,698 மாணவர்களும் 7,500 மாணவிகளும் தனித்தேர்வர்கள் 280 நபர்களும் என மொத்தம் 14,478 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு 160 மையங்களில் நடைபெறுகிறது. அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் போதிய பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் தேர்வு எழுதி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

The post ஆர்.எஸ்.மங்கலம் தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: